பதுங்கு குழியில் இருந்து வாட்ஸ்அப் தகவல் அனுப்பி தங்களது மீட்குமாறு கோரிக்கை


பதுங்கு குழியில் இருந்து வாட்ஸ்அப் தகவல் அனுப்பி தங்களது மீட்குமாறு கோரிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2022 9:58 PM IST (Updated: 27 Feb 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

பதுங்கு குழியில் இருந்து வாட்ஸ்அப் தகவல் அனுப்பி தங்களது மீட்குமாறு கோரிக்கை

உடுமலை:
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உணவு கிடைக்கவில்லை என்று பதுங்கு குழியில் இருந்து வாட்ஸ்-அப் தகவல் அனுப்பி தங்களது மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 
 தமிழக மாணவர்கள்
 உடுமலை ஜீவா நகரை  சேர்ந்தவர் அஸ்வந்த். அவரது நண்பர்கள் சசி (சென்னை), சந்த்ருஆனந்த் (காரைக்கால்) ஆகியோர் உக்ரைனில் கார்கிவ் நகரில் மருத்துவம் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். தற்போது ரஷியா-உக்ரைன் இடையே போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் உக்கரைன் நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இந்திய மாணவர்கள் தங்கி உள்ள பகுதிகளிலும் குண்டு வீச்சு நடப்பதாக அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர்கள் தாங்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள பதுங்கு குழியில் இருந்து செல்போனில் பேசி, அதை வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளனர். 
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் நாங்கள் தங்கியுள்ள கார்கிவ் பெரியநகரமாகும்.  இந்த நகரம் ரஷ்யா எல்லைப்பகுதியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. கார்கிவ் நகரத்தில் மட்டும் 5 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். குண்டு சத்தம் இந்த பகுதியில் கேட்டபடி உள்ளது. நேற்றுமுன்தினம்  கடையில் தண்ணீர், ரொட்டி, சிப்ஸ் ஆகியவைதான் கிடைத்தது. நேற்று  ஏ.டி.எம்.செயல்படவில்லை. கடைகள் திறக்கவில்லை. இங்கிருந்து இந்தியா திரும்புவதற்கு போலந்து அல்லது ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கிருந்துதான் வரவேண்டும். நாங்கள் இருக்கும் இடத்திற்கும் அந்த நாடுகளுக்கும் 1,400 கி.மீ.தூரம் இருக்கும். பயணநேரம் ஒருநாள் ஆகும். அத்துடன் அங்கு செல்ல போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால் அங்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை. இங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்ககோரி மத்திய, மாநிலஅரசுகளுக்கு விண்ணப்பம் அளித்துள்ளோம். இங்கு சிக்கியுள்ளவர்களை அரசு தான் பத்திரமாக மீட்டு அழைத்து செல்ல வேண்டும். மேற்கண்டவாறு அந்த மாணவர்கள் பேசியுள்ளனர்.
கோரிக்கை
மாணவர் அஸ்வந்தின் தந்தை  ஜெயக்குமார் கூறும்போது  “ போர் அறிகுறிகள் தெரிந்ததும் அஸ்வந்த் ஊர் திரும்புவதற்காக விமான டிக்கெட் எடுக்கச்சென்றுள்ளார். 25-ந்தேதி  அதிகாலை 2 மணிக்கு உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் இருந்து சென்னை புறப்படும் விமானத்திற்குதான் டிக்கெட் கிடைத்துள்ளது. கார்கிவ் நகரில் இருந்து கிவ் நகரம் 500 கி.மீ.தூரம் உள்ளது. ஊர் திரும்புவதற்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் 24-ந்தேதி காலை ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதனால் அஸ்வந்த் ஊர் திரும்பமுடியாமல் கார்கிவ் நகரில் உள்ளார்.  கார்கிவ் நகரில் இருந்து ருமேனியா 800 கி.மீ. தூரத்தில் உள்ளது. கார்கிவ் நகரில் இருந்து ருமேனியா செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லை. அதனால் கார்கிவ் நகரில் இருந்து, அங்குள்ளவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று தூதரகத்தையும்,  முதல்-அமைச்சரையும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

Next Story