கல்லூரி மாணவி தற்கொலை


கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2022 10:24 PM IST (Updated: 27 Feb 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் சக்திதேவி (வயது 19) தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று சக்திதேவி உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story