அரூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்து டிரைவர் சாவு


அரூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்து டிரைவர் சாவு
x
தினத்தந்தி 27 Feb 2022 10:33 PM IST (Updated: 27 Feb 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே 30 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

அரூர்:
அரூர் அருகே 30 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எருக்கம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடந்து வந்தது. இந்த பணியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது50) உள்ளிட்ட 4 பேர் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கிணற்றில் உள்ள பாறைகளை வெடி வைப்பதற்காக டிரைவர் ராஜா கம்பரசர் பொருத்தப்பட்ட டிராக்டரை கிணற்றின் அருகே ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் 30 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் டிரைவர் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உடன் வேலை செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ராஜாவின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு படையினர் கிணற்றில் இருந்து கிரேன்கள் மூலம் டிராக்டரை மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் கிணற்றில் பாய்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story