பரமத்திவேலூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
பரமத்திவேலூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குப்பிச்சிபாளையம் அருகே உள்ள பொய்யேரிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நேற்று காலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தில் வந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story