கர்ப்பிணியை தாக்கி வீட்டை விட்டு விரட்டியடிப்பு
ரூ.2 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுைமப்படுத்தியதாகவும், கர்ப்பிணியை தாக்கி வீட்டை விட்டு விரட்டியடித்தாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
காரைக்குடி,
ரூ.2 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுைமப்படுத்தியதாகவும், கர்ப்பிணியை தாக்கி வீட்டை விட்டு விரட்டியடித்தாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
கர்ப்பிணி
சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் சுமதி (வயது 32). இவருக்கும் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்த விஜயகுமார் (32) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது திருமணத்திற்கு பின்பு சுமதியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் அவர் சிவகங்கையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். விஜயகுமார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
அதன் பின் விஜயகுமார் தனது தந்தை இறந்ததற்காக ஊர் திரும்பினார்.அப்போது சுமதியோடு சமாதானமாகி சேர்ந்து வாழ்ந்தார்.இதனால் சுமதி கர்ப்பமடைந்தார். பின் விஜயகுமார் மீண்டும் வெளிநாடு சென்றார். அதன்பின் ஒரு மாதம் மட்டும் சுமதிக்கு செலவிற்கு பணம் அனுப்பினார்.அதன் பின் பணம் அனுப்பவில்லை, சுமதி கர்ப்பமாக இருந்ததால் செலவுக்கு பணம் அனுப்ப விஜயகுமாரிடம் போனில் கேட்ட போது அதற்கு விஜயகுமார் சுமதியை ஆபாசமாக பேசி என்ன பணம், நகை கொண்டு வந்தாய் என பேசி இந்த வீட்டில் வாழ வேண்டுமென்றால் ரூ.2 லட்சம் கொண்டு வா இல்லையென்றால் உன் தந்தை வீட்டுக்கு சென்று விடு என கூறியுள்ளார்.
3 பேர் மீது வழக்கு
இதனையறிந்த விஜயகுமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரி சுமதியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். சுமதி அணிந்திருந்த 5 பவுன் நகையை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் விஜயகுமார் அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story