அரக்கோணம் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அரக்கோணம் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி அண்டை மாநிலத்திற்கு வாகனங்கள் மூலமாக கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வேலூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கடவாரி கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகள் என மொத்தம் 1¼ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் நடத்திய விசாரணையில் திருத்தணியை அடுத்த தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த பாலாஜி (வயது 28) என்பதும், ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசியுடன் மினி லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் பாலாஜியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story