ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை முத்துக்கடையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இணை இயக்குனர் மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி கமலா, ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் நிர்மல் ராகவன், ரோட்டரி சங்க தலைவர் கமல் ராகவன், வக்கீல் ஜெயகுமார், ரோட்டரி செயலாளர் தனசேகரன், நகர சுகாதார நிலைய டாக்டர் லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு லட்சம் குழந்தைகளுக்கு
மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பொது இடங்கள், சுங்கச்சாவடி உள்ளிட்ட 800 இடங்களில் இந்த முகாம்கள் நடந்தது.
சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை, தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என 2,795 பணியாளர்கள் கலந்துகொண்டு சொட்டுமருந்து வழங்கினர்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்த முகாம்களில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நெமிலி
நெமிலியை அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நெமிலி, புன்னை, கரியகுடல், சயனபுரம், சிறுணமல்லி, புதுகண்டிகை உள்ளிட்ட 91 மையங்களில் நடைபெற்றது. இதில் 10,540 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதேபோல் பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தென்மாம்பாக்கம், நெடும்புலி, தென்னல், திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 முகாம்கள் அமைக்கப்பட்டு 2,130 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story