தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 27 Feb 2022 11:48 PM IST (Updated: 27 Feb 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பூவலூர் பொன்னியம்மன் கோவில் அருகே ஒரு வயலில்  மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள சிவன்கோவில் அருகே ஒரு வயலில் மின்கம்பி தாழ்வாக தொங்கி கொண்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆவுடையார்கோவில்.

மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிய நிழற்குடை
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலையில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் பிரிவு சாலை அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்தநிலையில் மதுப்பிரியர்கள் இங்கு அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடை மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குணசேகரன், நொய்யல்.

குரங்குகள் தொல்லை 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் நாளுக்கு, நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த குரங்குகள் குடியிருப்பு வீடுகளில் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து கடும் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகளில் உள்ள திண்பண்டங்கள் மற்றும் பொருட்களையும் தூக்கி சென்று விடுகிறது. மேலும் பொதுமக்களையும், குழந்தைகளையும்  சில நேரங்களில் கடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்ரா, திருமயம்.


புதர்மண்டி காட்சியளிக்கும் பொது கழிவறைகள்
கரூர் மாவட்டம்,வேலாயுதம்பாளையம் குளிர்ந்த மலை மாணிக்க தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக பொது கழிவறைகள் ஒன்று  உள்ளது. தற்போது அந்த கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் போய் விட்டது. இதனால் கழிப்பறைகளை சுற்றி முட்செடிகள் முளைத்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது கழிவறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தியும், சுற்றியுள்ள முட்செடிகளை அகற்றவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம்.

Next Story