காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பேச்சிப்பாறை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்:
பேச்சிப்பாறை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பூ கட்டும் தொழிலாளி
பேச்சிப்பாறை அருகே உள்ள குற்றியாறு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது29), பூ கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மோதிரமலை பகுதியை சேர்ந்த நிஷா என்ற இளம்பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
நிஷா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்த பின்பு தாய் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன், மனைவியை குடும்பம் நடத்த குழந்தையுடன் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் மனைவி வரவில்லையென கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். இந்தநிலையில், கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் குளிக்க செல்வதாக கூறி விட்டுசென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது, கோபாலகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேச்சிப்பாறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story