திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 28 Feb 2022 12:31 AM IST (Updated: 28 Feb 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுக்கோட்டை:
மாசித்திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் நேற்று இரவு கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதலும் நடைபெற்றது. பக்தர்கள் பலரும் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். அம்மன் வெள்ளி வாகனத்தில் பவனி வந்தார்.
கொடியேற்றத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
விழாவில் தொடர்ந்து தினமும் வருகிற 14-ந் தேதி வரை இரவு 8 மணி அளவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் பவனி வருவார். விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த திருவிழா வருகிற 15-ந் தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக கொடியேற்ற நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் குழுவினர், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவையொட்டி கடந்த 20-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை கொண்டு வந்து சாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story