மாவட்ட வில்வித்தை போட்டி
மாவட்ட அளவிலான முதலாவது வில்வித்தை போட்டி நடைபெற்றது.
விருதுநகர்,
சிவகாசி வில் வித்தை விளையாட்டு கழகத்தின் சார்பில் விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான முதலாவது வில்வித்தை போட்டி நடைபெற்றது. போட்டியில் சிறப்பு விருந்தினராக நோபிள் கல்வி குழும செயலாளர் டாக்டர் வெர்ஜின் இனிகோ கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதுடன் போட்டிகளை தொடங்கி வைத்தார். வில்வித்தை பயிற்சியாளரான தீபன் வரவேற்றார். இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகள் பிரிவில் தான்யா, மாணவர்கள் பிரிவில் புவனேஸ்வரன், அபிஷேக், ஸ்ரீவிஷ்ணு அதிகமான புள்ளிகளை பெற்று சிறப்பாக விளையாடினர். நோபிள் பள்ளி மாணவன் மணிராஜ் 30 மீட்டர் ரீகர்வ் பிரிவில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பெற்றார். மேலும் சிறப்பாகவும் அதிகமாக புள்ளிகளையும் பெற்ற அரசன் மாடல் பள்ளியும், நோபிள் மெட்ரிக் பள்ளியும் கோப்பையை பெற்றனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story