சொட்டு மருந்து முகாமில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே மோதல்
திருச்சியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
திருச்சி
திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது, 54-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும், 55-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் முகாமில் கலந்து கொண்டனர். அவர்கள் கலெக்டருக்கு பின்னால் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர்.
ஆதரவாளர்கள் இடையே மோதல்
அந்த நேரத்தில், எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் 55-வது வார்டு கவுன்சிலர் எப்படி கலந்து கொள்ளலாம் என்று புஷ்பராஜ் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறி இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கவுன்சிலராக பதவி ஏற்கும் முன்பே வார்டுகளில் யாருக்கு முக்கியத்துவம் என்பதை வலியுறுத்தி தி.மு.க.வினர் மோதிக் கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story