கோபி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்; விஷம் வைத்து கொல்லப்பட்டதா? வனத்துறையினர் விசாரணை


கோபி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்; விஷம் வைத்து கொல்லப்பட்டதா? வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 28 Feb 2022 2:26 AM IST (Updated: 28 Feb 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மர்மமான முறையில் 7 மயில்கள் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

கடத்தூர்
கோபி அருகே உள்ள ஒத்தகுதிரை கே.மேட்டுப்பாளையம் கிராமத்தை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த பகுதி முழுவதும் வாய்க்கால் பாசனம் என்பதால் நெல், கரும்பு, நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் அடிக்கடி விவசாய நிலங்களுக்கு பறந்து செல்வது உண்டு. 
இந்த நிலையில் கே.மேட்டுப்பாளையம் வாய்க்கால் அருகே 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அந்தியூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களை பார்வையிட்டனர். பின்னர் அந்த மயில்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் தான் அவைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும்,’ என்றனர். எனினும் இதுதொடர்பாக வனத்துறையினர் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story