திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததை கண்டித்து 3 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம்; புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு முடிவு
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததை கண்டித்து 3 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததை கண்டித்து 3 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கைவிட வேண்டும்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நேற்று சத்தியமங்கலத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார்.
வன உரிமைச் சட்டத்திற்கும், வன விலங்கு பாதுகாப்புச் சட்ட திருத்தத்திற்கும் விரோதமான புலிகள் காப்பக நடவடிக்கைகளை கண்டிப்பது. புலிகள் காப்பக பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிப்பதை கைவிடவேண்டும். மத்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில அரசின் உரிமைகளுக்கு விரோதமாக நடப்பதை கண்டிப்பது.
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
வருகிற மார்ச் மாதம் 16-ந் தேதி பெங்களூரு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடலூர், மசினகுடி, சுல்த்தான் பத்தேரி (கேரளம்), குண்டல்பேட்டை (கர்நாடகம்), பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாம்ராஜ்நகர் (கர்நாடகம்), தமிழகத்தில் தாளவாடி, ஆசனூர், சத்தியமங்கலம், பர்கூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நீலகிரி எம்.எஸ்.செல்வராஜ் எழுதிய ‘வன உரிமை அங்கீகார சட்டம்' என்ற நூலை உயர்நீதிமன்ற வக்கீல் கீதா வெளியிட, முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் பெற்றுக்கொண்டார். இதில் கூடலூர், பந்திப்பூர், சுல்த்தான் பத்தேரி, முத்தங்கா, குண்டல்பேட்டை, தாளவாடி, ஆசனூர், கடம்பூர், சத்தியமங்கலம், தெங்குமரஹாடா, ஊட்டி, மசினகுடி, கன்னியாகுமரி ஆகிய புலிகள் காப்பக பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், வன உரிமைச் செயல் பாட்டாளர் சி.ஆர்.பிஜாய், உயர்நீதிமன்ற வக்கீல் கீதா, நீலகிரி எம்.எஸ்.செல்வராஜ், திம்பம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் யுவ பாரத், தாளவாடி விவசாயிகள் சங்க நிர்வாகி கண்ணையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story