உக்ரைனிலுள்ள தூத்துக்குடி மாணவர்களின் விவரங்களை தெரிவிக்க தொடர்பு அலுவலர் நியமனம்: கலெக்டர் செந்தில்ராஜ்


உக்ரைனிலுள்ள தூத்துக்குடி மாணவர்களின் விவரங்களை தெரிவிக்க தொடர்பு அலுவலர் நியமனம்: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 28 Feb 2022 7:16 PM IST (Updated: 28 Feb 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனிலுள்ள தூத்துக்குடி மாணவர்களின் விவரங்களை தெரிவிக்க தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மாவட்ட மாணவர்களை குறித்த விவரங்களை தெரிவிக்க தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொடர்பு அலுவலர்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்கும் வகையில், தொடர்பு அலுவலராக துத்துக்குடி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா நியமிக்கப்பட்டு உள்ளார். அவரை செல்போன் எண் : 94450 08155 மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் : 0461-2340101, 2340603 ஆகிய எண்களில் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பத்தினர் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.
மறுவாழ்வு ஆணையர்
மேலும், தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரான ஜெசிந்தா லாசரஸ், செல்போன் எண்கள் 9445869848, 9600023645, 9940256444 மற்றும் மாநில கட்டுப்பபாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் : 1070 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story