கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
வேளாண் தனிப் பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டத்தை திருவண்ணாமலையில் நடத்தக்கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
இதில் விவசாயிகள் காதில் பூ வைத்த படி நின்றனர். தரையில் அமர்ந்து இலைபோட்டு சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வேளாண் தனிப் பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் உணவு உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கும் திருவண்ணாமலையில் நடத்த வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். போராட்டத்தில் விவசாயிகள் பாலகிருஷ்ணன், சரவணன், சதாசிவம், ரமேஷம், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story