ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை


ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை
x
தினத்தந்தி 28 Feb 2022 7:24 PM IST (Updated: 28 Feb 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் சார்பில், ‘டிசைன் திங்கிங் மற்றும் கிரிட்டிகல் திங்கிங்’ என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. கவுன்சில் தலைவரும், கல்லூரி முதல்வருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சில் அமைப்பாளர் பேராசிரியை நித்யானந்த ஜோதி வரவேற்று பேசினார்.
கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கணிப்பொறித்துறை இணை பேராசிரியர் மற்றும் உளவியலாளர் பாலகிருஷ்ணன் பயிற்சி பட்டறையை நடத்தினார். 3 அமர்வுகளாக நடைபெற்ற பயற்சி பட்டறையின் முடிவில் மாணவர்கள் தனித்தனியாக ப்ராஜக்ட் வடிவமைத்து சமர்ப்பித்தனர்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை, இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய மேரி வரவேற்று பேசினார்.
அறிவியலின் வளர்ச்சி குறித்து இயற்பியல் துறை உதவி பேராசிரியர் சேகர் விளக்கி கூறினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் தர்ம பெருமாள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் அந்ேதாணி சகாய சித்ரா செய்து இருந்தார். 

Next Story