‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Feb 2022 8:20 PM IST (Updated: 28 Feb 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வங்கி ஏ.டி.எம். மையம் தேவை
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா தெற்குப்பட்டி கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வங்கி ஏ.டி.எம். மையம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானூருக்கு சென்று, ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வேண்டியுள்ளது. எனவே. தெற்குபட்டியில் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-கனியப்பா, தெற்குப்பட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
நெல்லை சங்கர்நகர் பண்டாரகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-முருகன், சங்கர்நகர்.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
ராதாபுரம் தாலுகா விஜயாபதி தரைமட்ட பாலத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அதன் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு இரவில் பொதுமக்கள் இருள் சூழ்ந்த பகுதி வழியாகவே நடந்து செல்கின்றனர். எனவே, மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
கூடுதல் பஸ் வசதி தேவை
பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் இருந்து நெல்லைக்கு காலை, மாலையில் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். அப்போது குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
-முத்தையா, கிருஷ்ணாபுரம்.
சுகாதாரக்கேடு

பாளையங்கோட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியார் மனநல மருத்துவமனை, இரும்புக்கடை அருகில் சர்வீஸ் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ஜெபசிங், நெல்லை.
அரசு டவுன் பஸ் இயக்கப்படுமா?
தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் இருந்து தென்காசி பழைய பஸ் நிலையம் வழியாக மின்நகருக்கு இயக்கப்பட்ட மினி பஸ் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?.
-அருணாசலம், தென்காசி.
பொது கழிப்பறை தேவை
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகில் பொது கழிப்பறை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு பொது கழிப்பறை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
-இசக்கிமுத்து, வாசுதேவநல்லூர்.
சேதமடைந்த மின்கம்பம்

புளியங்குடி டி.என்.புதுக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- அய்யப்பன், புளியங்குடி.
ஓடை தூர்வாரப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் ஆவுடையார்குளம் மறுகால் ஓடையில் கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், அந்த ஓடையில் பாம்புகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் ஓடையின் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் பாம்புகள் புகுந்து விடுகின்றன. எனவே, ஓடையை தூர்வாரி சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-ஜெயக்குமார், திருச்செந்தூர்.
காட்சி பொருளான குடிநீர் தொட்டி

உடன்குடி கூளத்தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பயன்பாடற்ற குடிநீர் தொட்டியை சூழ்ந்து குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. எனவே, காட்சி பொருளான குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரை பழுது நீக்கி, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டுகிறேன்.
-மூர்த்தி, உடன்குடி.

Next Story