கொடுவிலார்பட்டி, லட்சுமிபுரத்தில் உரக்கிட்டங்கிகளில் கலெக்டர் ஆய்வு


கொடுவிலார்பட்டி, லட்சுமிபுரத்தில் உரக்கிட்டங்கிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Feb 2022 10:12 PM IST (Updated: 28 Feb 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

கொடுவிலார்பட்டி, லட்சுமிபுரத்தில் உரக்கிட்டங்கிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி:
தேனி அருகே கொடுவிலார்பட்டி, பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் உரக்கிட்டங்கிகளில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார். அங்கு உரம் இருப்பு, ஆவணங்களை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு சரியான விலையில், தரமான உரம் வழங்க வேண்டும், உரம் விலை மற்றும் இருப்பு விவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் எழுதி வைக்க வேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். 
இதேபோல, அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, லட்சுமிபுரம், வடபுதுப்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து, பொருட்கள் வினியோகம், பொருட்கள் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்துலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) மணிகண்ட பிரசன்னா, கூட்டுறவு சார்பதிவாளர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story