வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 Feb 2022 10:27 PM IST (Updated: 28 Feb 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியானார்.

கிருஷ்ணராயபுரம்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் மோகன்ராஜ்(வயது 35). இவர் நேற்று முன்தினம் மேட்டுமகாதானபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அன்று மாலை அப்பகுதியில் உள்ள பெரிய வாய்க்காலில் இறங்கி கை கழுவுவதற்காக இறங்கியுள்ளார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்து விட்டார். அருகே உள்ளவர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த தீயணைப்புத்துறையினர் இரவு முழுவதும் தேடி கிடைக்காத நிலையில் நேற்று காலை மோகன்ராஜ் உடல் கிடைத்தது இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மோகன்ராஜ் மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story