கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
துகவூர் கிராம ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள துகவூர் கிராம ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிவகங்கை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் நாகநாதன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முன்னிலை வகித்தார். முகாமில் ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுத்தன்மையை நீக்கம் போன்ற பணிகளும், சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமில் டாக்டர் முருகன் தலைமையிலான சாலைக்கிராமம் கால்நடை மருத்துவமனை ஆய்வாளர் பிரபாகர் கால்நடை பராமரிப்பு உதவியாளர் வேதவள்ளி ஆகியோர் கால்நடைகளுக்கு பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை வழங்கினார்கள். துகவூர் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் ஆடு, மாடுகளுக்கான பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை பெற்று பலன் அடைந்தனர்.
Related Tags :
Next Story