இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை
x
தினத்தந்தி 28 Feb 2022 10:35 PM IST (Updated: 28 Feb 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது 2 படகுகளையும் இலங்கை அரசுைடமையாக்கி கிளிநொச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமேசுவரம்
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது 2 படகுகளையும் இலங்கை அரசுைடமையாக்கி கிளிநொச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.
12 பேர் விடுதலை
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 12-ந் தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 12 பேரும் நேற்று கிளிநொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 பேரை விடுவித்தும், அவர்களது 2 விசைப்படகுகள் இலங்கை அரசுைடமை ஆக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ஒப்படைப்பு
விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரும்  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் கவலையில் உள்ளனர்.

Next Story