கல்லூரி மாணவரை தாக்கிய சாலை பணியாளர் கைது


கரூர்
x
கரூர்

கல்லூரி மாணவரை தாக்கிய சாலை பணியாளர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
கரூர் பஞ்சமாதேவி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மனோஜ் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (53). சாலைப் பணியாளர். ஆசைத்தம்பியின் வீட்டின் அருகே மனோஜ் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசைத்தம்பி தன்னை தாக்கியதாகவும் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் வெங்கமேடு காவல் நிலையத்தில் மனோஜ் புகார் அளித்தார். அதன்பேரில் வெங்கமேடு போலீசார் ஆசைத்தம்பி மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Next Story