சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணிகள் மும்முரம்
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குடிமங்கலம்
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வெங்காய சாகுபடி
குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் அமைத்து காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் விலை ஏற்ற இறக்கங்களை கருத்தில்கொண்டு பட்டறை அமைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் பகுதியில் வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்கு பிறகு பிடுங்கி நடவு செய்தும், விதை வெங்காயம் வாங்கியும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
அறுவடை பணிகள்
விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன வெங்காயம் சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
குடிமங்கலம் பகுதியில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு விதை, நடவு, களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், மருந்து தெளித்தல் எனஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவாகிறது. சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்து விலை அதிகமான நேரங்களில் விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது.
சின்னவெங்காயம் 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். சின்னவெங்காயம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் இரண்டு மூன்று நாட்கள் உலர வைக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story