நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைக்க வேண்டும். கலெக்டர் வேண்டுகோள்
நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர்
நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மறைமுக தேர்தல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 126 வார்டுகள், 3 பேரூராட்சிகளில் உள்ள 45 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் 22-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் நாளை (புதன்கிழமை) தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர் அல்லது செயல் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொள்ளலாம்.
நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் வருகிறது 4-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவவர்களால் கூட்டப்பட்டு, அன்றைய தினமே வேட்பு மனுக்கள் பெறப்பட்டு போட்டி இருப்பின் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.
ஒத்துைழப்பு தர வேண்டும்
துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் அன்றைய நாளிலேயே மதியம் 2.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு போட்டியிருப்பின் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும். மறைமுக தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story