கால்வாய்க்குள் இறங்கிய அரசு பஸ்
கால்வாய்க்குள் இறங்கிய அரசு பஸ்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் எல்.கருங்குளம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார். இதனால் பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறி அரசு பஸ் அருகில் இருந்த கால்வாய்க்குள் இறங்கியது. இதில் 62 பயணிகள் இருந்தனர். இந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக அனைவரும் மாற்று பேருந்தில் ராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மீட்பு வாகனம் மூலம் அரசு பஸ் மீட்கப்பட்டு ராமநாதபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story