கணவர், மாமனாருக்கு தலா 7 வருடம் சிறை தண்டனை


கணவர், மாமனாருக்கு தலா 7 வருடம் சிறை தண்டனை
x
தினத்தந்தி 1 March 2022 12:01 AM IST (Updated: 1 March 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

கணவர், மாமனாருக்கு தலா 7 வருடம் சிறை தண்டனை விதித்து மதுரை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

மதுரை, 
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர் தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண், தனது கணவர் லிங்கப்பனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இதுபற்றி கண்டுகொள்ளவில்லை.
அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பெருமாள் தொல்லை கொடுத்துள்ளார். 2 வருடங்களாக இதேநிலை நீடித்துள்ளது. இதனால் மனம் உடைந்த அந்த பெண், தனது 7 வயது மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து எம்.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள், அவரது மகன் லிங்கப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் சி.லதாசாந்தி ஆஜரானார்.
விசாரணை முடிவில், பெருமாள், லிங்கப்பன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் இருவருக்கும் தலா 7 வருடம் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், தனது தந்தை பெருமாளின் அத்துமீறிய செயலை கண்டும் காணமால் இருந்த காரணத்தினால், லிங்கப்பனுக்கும் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்து உள்ளார்.
=====

Next Story