உக்ரைனில் தவிக்கும் மருத்துவ மாணவியை மீட்க கோரிக்கை


உக்ரைனில் தவிக்கும் மருத்துவ மாணவியை மீட்க கோரிக்கை
x
தினத்தந்தி 1 March 2022 12:39 AM IST (Updated: 1 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் தவிக்கும் மருத்துவ மாணவியை மீட்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள துவரடிமனையை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. இவரது மகள் பிரீத்தி (வயது 22). இவர் உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் நாடு திரும்ப முடியாமல் பிரீத்தி அங்கு தவித்து வருகிறார். இவரை போல தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளும் அங்கு தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் அங்கிருந்தபடியே மாணவி பிரீத்தி செல்போன் மூலம் தனது பெற்றோரிடம் பேசுகையில், போரில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படகூடாது என்பதற்காக அந்த நாட்டு அரசு உக்ரைன் அருகே உள்ள ருமேனியாவில் பாதுகாப்பான இடத்தில் மாணவ-மாணவிகளை தங்க வைத்துள்ளது என்று கூறியிருக்கிறார். ஆகவே, உக்ரைனில் இருந்து ருமேனியாவில் தங்க வைக்கப்பட்டு உள்ள தங்களது மகளை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரீத்தியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story