சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு


சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 1 March 2022 1:46 AM IST (Updated: 1 March 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் சிலம்பம் ேபாட்டியில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.

அருப்புக்கோட்டை, 
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-வது பஞ்சபூதா சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 650 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில்கலந்து கொண்ட அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவர் சிவசர்மா தனித்திறன் போட்டியில் முதலிடமும், சிலம்பம் சண்டை போட்டியில் 2-வது இடமும் பெற்றார். 7-ம் வகுப்பு மாணவர் சஞ்சய்குமார் தனித்திறன் போட்டியில் 2-வது இடமும், சிலம்பம் சண்டை போட்டியில் 3-வது இடமும் பெற்றுள்ளார். அதேபோல் 8-ம் வகுப்பு மாணவர் திருக்குமரன் தனித்திறன் போட்டியில் 3-வது இடமும் சிலம்பத்தில் 3-வது இடமும் பெற்றுள்ளார்.  ஜூனியர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவர் சபரிபிரசாத் தனித்திறன் போட்டியில் 2-வது இடமும், சிலம்பத்தில்  முதலிடம் பிடித்து கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களை ஊக்குவித்த உடற்கல்வி இயக்குனர் சவுந்தரபாண்டியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலாளர் காசிமுருகன், தலைவர் ஜெயகணேசன், தலைமையாசிரியர் ஆனந்தராஜன் ஆகியோர் பாராட்டினர். 

Next Story