உக்ரைனின் மேற்கு பகுதியில் போர் சூழல் இல்லை; தாயகம் திரும்பிய கர்நாடக மாணவர்கள் பேட்டி
உக்ரைனின் மேற்கு பகுதியில் போர் சூழல் இல்லை என்று அங்கிருந்து தாயகம் திரும்பிய கர்நாடக மாணவர்கள் கூறினர்.
பெங்களூரு: உக்ரைனின் மேற்கு பகுதியில் போர் சூழல் இல்லை என்று அங்கிருந்து தாயகம் திரும்பிய கர்நாடக மாணவர்கள் கூறினர்.
கர்நாடக மாணவர்கள்
ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் சுமார் 500 கர்நாடக மாணவர்கள் உள்பட இந்தியர்கள் 20 ஆயிரம் பேர் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இதுவரை கர்நாடக மாணவர்கள் 37 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து போலந்து, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து விமானம் மூலம் மாணவர்கள் டெல்லி, மும்பைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
அங்கிருந்து கர்நாடக மாணவர்கள் விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வருகிறார்கள். அந்த மாணவர்கள் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு அரசின் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத் கூறியுள்ளார்.
அதன்படி நேற்று கர்நாடகத்திற்கு அழைத்து வரப்பட்ட மாணவர்களில் முகமது சோயிப், பிரதிக் நாகராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுக்கு வந்தோம்
நாங்கள் உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள உசோரட் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகிறோம். நாங்கள் இருந்த பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை. நாங்கள் அண்டை நாடான ஹங்கேரிக்கு பாஸ்போர்ட்டை காட்டிவிட்டு வந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தோம். உக்ரைன் எல்லையை தாண்டியதும் அங்கு 5 பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
அதில் நாங்கள் உள்பட இந்தியர்கள் பயணித்து விமான நிலையத்திற்கு வந்தோம். உக்ரைனின் மேற்கு பகுதியில் போர் சூழல் இல்லை.
இவ்வாறு அந்த மாணவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story