மகா சிவராத்திரியையொட்டி த்ரிநேத்ரேஷ்வரருக்கு 11 கிலோ தங்க கவசம் அணிவிப்பு
மகா சிவராத்திரியையொட்டி த்ரிநேத்ரேஷ்வரர் கோவிலில் 11 கிலோ தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதைெயாட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.
மைசூரு: மகா சிவராத்திரியையொட்டி த்ரிநேத்ரேஷ்வரர் கோவிலில் 11 கிலோ தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதைெயாட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.
மகா சிவராத்திரி
மைசூரு அரண்மனை வளாகத்தில் த்ரிநேத்ரேஷ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக சிவராத்திரியன்று த்ரிநேத்ரேஷ்வரரின் 11 கிலோ எடையிலான முககவசம் ஜோடிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதில் த்ரிநேத்ரேஷ்வர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி 1-ந்தேதி (அதாவது இன்று) மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கர்நாடகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவிலிலும் பூஜைக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
11 கிலோ தங்க கவசம்
த்ரிநேத்ரேஷ்வரர் கோவிலில் நேற்று காலை மாவட்ட கருவூல அறையில் இருந்து த்ரிநேத்ரேஷ்வரரின் தங்க கவசம் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அந்த கவசம் ஒரு பெட்டியில் வைத்து கலெக்டர் பகாதி கவுதம் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து கோவிலில் அர்ச்சர்கள் தங்க கவசம், தலைமேல் உள்ள கங்கை, சந்திரன், காதுகளில் இருக்கும் வளையம் உள்ளிட்ட பாகங்களை சுத்தம் செய்து ஜோடித்தனர். பின்னர் அதனை கோவில் கருவறையில் வைத்து பகல், இரவாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் பின்னர் த்ரிநேத்ரேஷ்வரருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சிவராத்திரியையொட்டி இன்று முழுவதும் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
பலத்த பாதுகாப்பு
இதையொட்டி கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தங்கமுககவசத்தை மைசூரு மன்னர் சாமராஜ உடையார் நேர்த்திக்கடனாக செய்துகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story