முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2022 2:59 AM IST (Updated: 1 March 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம்         தலைமை    தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 
பொய் வழக்கு
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து முதல் -அமைச்சரான போதும் கூட எதிர் கட்சியினர் மீது பொய் வழக்கும், கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான், இன்றும் அவர் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர். முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதனால்தான் இன்றும் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் குறையவில்லை.
வெற்றி மாறிவிட்டது
இந்த தேர்தலில் காலையில் நடந்தது ஒன்று. நள்ளிரவில் நடந்தது ஒன்று இதன் காரணமாகத்தான் ஆளும் கட்சியினர் வெற்றி பெற்றனர். 10 சதவீத மக்கள் மாற்றி ஓட்டுப்போட்டதால், வெற்றி மாறிவிட்டது. மக்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க.வால் மட்டுமே தரமுடியும் என்பதை மக்கள் விரைவில் உணர்வார்கள். அ.தி.மு.க. போன்ற இயக்கத்தை பொய் வழக்குகளால் முடக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேசினார். 
போலீஸ் பாதுகாப்பு
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும். தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீஷ், பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா என்கிற ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர்கள் கே.எஸ்.கோபால், நாச்சிமுத்து, மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், பொருளாளர் முருகானந்தம், மாநகர் பிரதிநிதி ஆஜம், கைத்தறி பிரிவு மாவட்ட செயலாளர் நல்லசாமி, எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சின்னு என்கிற சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதையொட்டி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story