புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
ஆபத்தான பள்ளம் மூடப்படுமா
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சாலையோரத்தில் பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறிவிழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆஸ்பத்திரிக்கு சிசிக்சைக்கு வருபவர்களும், பள்ளத்தினால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா?
-ராசநிலவன், பேராவூரணி.
சாலை நடுவே ஆபத்தான பள்ளம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பழைய அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையின் நடுவே பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலை நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் சாலை நடுவே உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
Related Tags :
Next Story