பெண் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு
பூதப்பாண்டி அருகே பெண் வக்கீலை அரிவாளால் வெட்டிய கணவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே பெண் வக்கீலை அரிவாளால் வெட்டிய கணவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் வக்கீல்
பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் அருள்ஞானபுரத்தை சேர்ந்தவர் அஜீஸ் (வயது45). இவரது மனைவி சாந்தி (30), வக்கீல். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் சாந்தி தனது ஸ்கூட்டரில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார். இறச்சகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் அஜீஸ் வந்தார். அவர் திடீரென சாந்தியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
அரிவாள் வெட்டு
தகராறு முற்றிய நிலையில் அஜீஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சாந்தியின் வலது கையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சாந்தி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனே அஜீஸ் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து காயமடைந்த சாந்தியை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசில் சரண்
இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடைேய பெண் வக்கீலை வெட்டிய கணவர் அஜீஸ் அரிவாளுடன் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் வக்கீலை நடுரோட்டில் கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story