கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை


கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 March 2022 5:11 AM IST (Updated: 1 March 2022 5:11 AM IST)
t-max-icont-min-icon

திற்பரப்பு அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரம்:
திற்பரப்பு அருகே உள்ள சேக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் (வயது42), கொத்தனார். இவருக்கு சோனியா (38) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெஸ்டின் கடந்த சில தினங்களாக வாழ்க்கையில் வெறுப்புற்று விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனே, உறவினர்கள் அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெஸ்டின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story