மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 3 பேர் கைது
மண்டைக்காடு புதூரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மண்டைக்காடு புதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அவர்கள் சி.ஆர்.எஸ்.நகரில் சென்ற போது ஒரு ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது 1.100 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியை சேர்ந்த மாரிமுத்து (வயது26), சுசீந்திரம் மறுகால்தலையை சேர்ந்த குட்டி (22), வர்த்தக நாடார் குடியிருப்பை சேர்ந்த சகாயகவின் (23) என்பதும், இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story