திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 1 March 2022 3:16 PM IST (Updated: 1 March 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தீர்த்தவாரி நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ திருவிழாவின் 9-வது நாள் உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 6.30 மணிக்கு ஆளும் பல்லக்கில் சாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 11 மணி அளவில் கோவில் தெப்பக்குளத்தின் எதிரில் உள்ள ஆண்டாள் நீராட்டு மண்டபத்தில் மண்டப திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு சக்கரத்தாழ்வாருக்கு கைரவிணி புஷ்கரணி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை கமிஷனர் பெ.க.கவெனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story