நந்தம்பாக்கத்தில் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகம்; சகோதரிகள் கைது


நந்தம்பாக்கத்தில் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகம்; சகோதரிகள் கைது
x
தினத்தந்தி 1 March 2022 3:57 PM IST (Updated: 1 March 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

வர்த்தக மையத்தின் முகப்பில் 2 பெண்கள் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி, அங்கு வந்தவர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகித்தனர். சகோதரிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக வர்த்தக மையத்தின் முகப்பில் 2 பெண்கள் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி, அங்கு வந்தவர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.

அதில் தேர்தலின்போது மின்னணு எந்திரத்துக்கு பதிலாக ஓட்டு சீட்டை பயன்படுத்த வேண்டும் என அச்சிடப்பட்டு இருந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்துச்சென்று நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அதில் அவர்கள், மதுரையை சேர்ந்த சட்டப்படிப்பு படித்த நந்தினி (வயது 30), அவருடைய சகோதரி நிரஞ்சனா (26) என தெரியவந்தது. சகோதரிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story