காய்கறி வியாபாரி கொலை: கொடுங்கையூரில், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்


காய்கறி வியாபாரி கொலை: கொடுங்கையூரில், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2022 4:14 PM IST (Updated: 1 March 2022 4:14 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி வியாபாரி கொலைவழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொடுங்கையூரில், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் காய்கறி மற்றும் பூக்கடை நடத்தி வந்த வியாபாரி கோபி(வயது 51) நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற அவருடைய மனைவி லதாவும்(45) அரிவாளால் வெட்டப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே பகுதியில் சாலையோரம் கடை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அங்கு பழக்கடை நடத்தி வரும் அண்ணன், தம்பிகளான ஆனந்த், அரவிந்த் ஆகியோர் தங்கள் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கோபியை வெட்டிக்கொன்றது தெரிந்தது. இந்தநிலையில் காய்கறி வியாபாரி கோபியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடுங்கையூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.


Next Story