சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்


சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 1 March 2022 4:17 PM IST (Updated: 1 March 2022 4:17 PM IST)
t-max-icont-min-icon

சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

ீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
 வெள்ளகோவில் நகராட்சி நாகமநாயக்கன்பட்டி மேற்கு பகுதிகளில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. உப்பு தண்ணீர்தான் வினிேயாகம் செய்யப்படுகிறது. எனவே குடிப்பதற்கு நல்ல தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும் 
திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் உடயாக்கவுண்டர் வீதியில்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூர்வாரப்பட்ட சாக்கடை கழிவுகள் வீதியில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இது குறித்து  பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமலும் உள்ளது. எனவே வீதிகளில் கிடக்கும் சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
அவினாசியில் உள்ள கல்லூரி பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை.  மேலும் அந்த பகுதியில்  வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பு அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
---

Next Story