இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிவலிங்க பூஜை


இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிவலிங்க பூஜை
x
தினத்தந்தி 1 March 2022 7:00 PM IST (Updated: 1 March 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிவலிங்க பூஜை

குண்டடம் அருகே, இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது.
குண்டடம் அருகே சந்திராபுரம் விநாயகர் கோயிலில் நடைபெற்ற இந்த பூஜையை இந்து அன்னையர் முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நளினி கலந்து கொண்டு பூஜையை நடத்தினார். இதில் சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பங்கேற்று பூஜை செய்தனர். தொடர்ந்து மஹாசிவராத்திரியின் மகத்துவம் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் செய்திருந்தார்.


Next Story