ஆரோவில் குதிரையேற்ற போட்டி தொடங்கியது 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு


ஆரோவில் குதிரையேற்ற போட்டி தொடங்கியது 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 March 2022 7:52 PM IST (Updated: 1 March 2022 7:52 PM IST)
t-max-icont-min-icon

ஆரோவில் குதிரையேற்ற போட்டி தொடங்கியது 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

வானூர்
புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 22-வது ஆண்டு குதிரையேற்ற போட்டி  இன்று தொடங்கியது. 
இந்த போட்டிகளில் சென்னை, கோவை, நீலகிரி, பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். 
முதல் நாளான  இன்று மாலை 70 செ.மீ, 80 செ.மீ. உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, திருப்பூர், கோவை, புதுச்சேரி பகுதியை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டிகள் வருகிற 6-ந் தேதி வரை தினமும் காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையிலும் நடக்கின்றன. 
===

Next Story