40 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி; பெரியகுளம் அணி சாம்பியன்
பெரியகுளத்தில் நடந்த மாவட்ட அளவில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூைடப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பெரியகுளம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெரியகுளம்:
பெரியகுளத்தில் மாவட்ட அளவில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில், தேனி, போடி, பெரியகுளம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்துகொண்டன.
இந்த போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. லீக் சுற்றில் வெற்றி பெற்ற பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணி, வடுகப்பட்டி, போடி, பெரியகுளம் கேபிட்டல்ஸ் ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. அரைஇறுதி போட்டியில் வெற்றிபெற்ற பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியும், போடி அணியும் இறுதி போட்டியில் விளையாடியது. இதில் பெரியகுளம் அணி 34-27 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. போடி அணி 2-ம் இடத்தை பிடித்தது. முன்னதாக 3 மற்றும் 4-ம் இடத்திற்கான போட்டியில் பெரியகுளம் கேபிட்டல்ஸ் அணியும், வடுகப்பட்டி அணியும் மோதின. இதில் 35-21 என்ற புள்ளி கணக்கில் பெரியகுளம் கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்று 3-ம் இடத்தை பிடித்தது. வடுகப்பட்டி அணி 4-ம் இடத்தை பிடித்தது.
பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் துணைத்தலைவர் அபுதாகிர், செயலாளர் சிதம்பரசூரியவேலு, பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story