‘நான் முதல்வன்' திட்ட தொடக்க விழாவில் 23 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
‘நான் முதல்வன்' திட்ட தொடக்க விழாவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 23 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
தேனி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான ‘நான் முதல்வன்' திட்ட தொடக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் அரங்கில் இருந்தபடி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த விழாவில் தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர்.
அதன்படி, தேனி மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 27 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 97 பள்ளிகளில் இந்த திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் 23 ஆயிரத்து 455 பேர் பங்கேற்று முதல்-அமைச்சரின் உரையை கேட்டனர்.
அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் பங்கேற்று நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story