மதுரை சிறை கைதி திடீர் சாவு


மதுரை சிறை கைதி திடீர் சாவு
x
தினத்தந்தி 1 March 2022 10:40 PM IST (Updated: 1 March 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

மதுரை சிறை கைதி திடீர் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, 
திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 36). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story