4 பள்ளி பஸ்கள் பறிமுதல்; ரூ.1 லட்சம் அபராதம்
நாகையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.
நாகப்பட்டினம்:
நாகையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.
வாகன சோதனை
நாகை மாவட்டத்தில் அனுமதி சீட்டு, தகுதிச்சான்று உள்ளிட்டவை இல்லாமலும், அதிக நபர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் 3 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
4 பள்ளி பஸ்கள் பறிமுதல்
இதில் ஏனங்குடி, திருமருகல், திட்டச்சேரி, கருவேலங்கடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தகுதிச்சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 4 பள்ளி பஸ்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பஸ்களை நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
ரூ.1 லட்சம் அபராதம்
மேலும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பஸ்களுக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அனுமதி சீட்டு, தகுதிச்சான்று இன்றி பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டால், அவை பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story