காதல் திருமணம் செய்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 March 2022 10:57 PM IST (Updated: 1 March 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கல்:
தலைஞாயிறு பேரூராட்சி கேசவனோடை, காந்தி வீதியை சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மகன் அய்யப்பன் (வயது 29). கீழ்வேளூர் அருகே ஆந்தகுடி திருப்பஞ்சனம் கீழத்தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் நித்தியா (23). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் திருப்பஞ்சனத்தில் நித்தியாவின் தந்தையின் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அய்யப்பனுக்கும், நித்தியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அய்யப்பன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் ‌போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story