கல்வராயன்மலையில் 5 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை
கல்வராயன்மலையில் 5 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலையில் உள்ள தாளடிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி ஜெயலட்சுமி(வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. 3 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்த ஜெயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story