லாரி மோதி பெண் தூய்மை பணியாளர் பலி
நாகையில் லாரி மோதி பெண் தூய்மை பணியாளர் பலியானார். லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெளிப்பாளையம்:
நாகையில் லாரி மோதி பெண் தூய்மை பணியாளர் பலியானார். லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்
நாகை காட்டு நாயக்கன் தெரு, மருந்து கொத்தள ரோட்டில் வசிப்பவர் சிவக்குமார். இவருடைய மனைவி இந்திரா (வயது46). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்திரா நாகையில் ஒரு பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
லாரி மோதியது
இந்த நிலையில் இந்திரா நேற்று முன்தினம் முதலாவது கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இந்திரா படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story