குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
க.பரமத்தி
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன். பெயிண்டர். இவருடைய மனைவி பவானி (வயது 25). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மகேந்திரனுக்கும், பவானிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பவானி தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலையடுத்து சின்னதாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று பவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து பவானியின் தாய் பாப்பாத்தி சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story